BLISS

BLISS
MY LORD SOMASKANDAR

Monday, April 18, 2011

சோமாஸ்கந்த மூர்த்தி






IT WAS WHEN I KEPT SEARCHING FOR GOD PICTURES IN WEBSITES .SUDDENLY I CAME ACROSS THIS PICTURE "LORD SOMASKANDAR" I WAS FEELING BLESSED ,BLISSFULL AND A KIND OF HAPPINESS UNEXPLINABLE .THEN I KNEW THIS IS MY LORD SHIVA AND MA PARVATHY WITH LORD MURUGA ON
NANDHI.THIS WAS THE MOORTHY FORM WORSHIPED BY LORD VISHNU TO LORD SHIVA TO BLESS HIM WITH FOR A BABY.The form worshipped by mahavishnu is the saha umA skandha mUrthi or sOmAskandha murti.

somaskandhar

Somaskandar

mahA vishNu worshipped this mrti for long time having at his heart. Later brahmA requested mahAviShNu for this mUrti and got the same. He worshipped the mUrti and then indra got the same as boon. உமையோடும், கந்தனோடும் இறைவன் குடும்ப சமேதராய்க் காட்சி அளிக்கும் திருவுருவே சோமாஸ்கந்த மூர்த்தி என அழைக்கப் படுகின்றது. இந்தத்
திருமேனியைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு எனக் கூறப் படுகின்றது. இறைவன் ஒரு இனிய அன்பான கணவனாய், பாசமிக்க தந்தையாய்க் காட்சி அளிக்கும் இந்த மூர்த்தம் திருவாரூரில் மிகச் சிறப்பு வாய்ந்து விளங்குகின்றது. சச்சிதானந்தம் ஆன இறைவனை சத்= இறைவன், சித்=இறைவி என்றும் இருவரும் சேர்ந்தே ஆனந்தம்=கந்தன் என்றும் விளங்குவதாயும் சொல்லுவார்கள். உண்மையான இறைவனும், நன்மையான இறைவியும் சேர்ந்து படைத்த அழகே வடிவான கந்தன் எனவும் சொல்லலாம்.

ஈசன் அமர்ந்த திருக்கோலத்தில் இடக்காலை மடித்துக் கொண்டும், வலக்காலைத் தொங்க விட்டுக் கொண்டும், புலித் தோலோ அல்லது பட்டாடையோ அணிந்து கொண்டும் இருப்பார். நான்கு திருக்கரங்களில் பின்னால் உள்ள இரு கரங்களிலும் முறையே மானும், மழுவும் இருக்கும். முன்னால் உள்ள இருகரங்களும் முறையே அபய முத்திரையும், வரத முத்திரையும் காட்டிக் கொண்டிருக்கும். அம்பிகை நேர்மாறாக வலக்காலை மடித்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டுக் கொண்டிருப்பார். வலக்கரம் தாமரையுடனும், இடக்கரம் மேனியில் அமர்த்தியும் காணப்படும். அம்பிகையின் மடியிலோ அல்லது இருவருக்கும் நடுவே ஆடிக் கொண்டோ குழந்தை கந்தன் ஆனந்தமாய்க் காட்சி தருவான்.














ஆடிய கோலத்தில் இருக்கும் கந்தனின் இடக்கரம் பழத்தையும், வலக்கரம் ஆள்காட்டி விரலைக் காட்டியபடியும் காணப்படும். நம்மைச்சுட்டிக் காட்டுவதாயும் அமைந்திருக்கும் இந்தக் கோலம் காணக் கிடைக்காத அரிய காட்சி.


இறைவன் மிகமிக பெரியவன்.